திருமணம் செய்யாமல் திருநங்கை நடிகையுடன் குடித்தனம் நடத்திய நபர்! தற்போது அவர் செய்த செயலால் ஏற்பட்ட அதிர்ச்சி! கதறும் அஞ்சலி!

தன்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததை அடுத்து பிரிந்து செல்ல முயன்றதால் முகத்தில் அமிலம் வீசுவேன் என காதலர் மிரட்டியுள்ளதாக திருநங்கை நடிகை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.


மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அஞ்சலி அமீர் ஒரு திருநங்கை. தமிழில் ராம் இயக்கத்தில் மம்முட்டி, அஞ்சலி, சாதனா நடித்த பேரன்பு படத்தில் அஞ்சலி அமீரும் நடித்திருப்பார். அந்த படத்திலும் அவர் திருநங்கையாகவே நடித்திருந்தார்.  

அஞ்சலி அமீர் தற்போது அவரது வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் நேரலையில் தோன்றிய அஞ்சலி, தான் ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்ததாகவும், அந்த சமயத்தில் அந்த காதலர் தன்னை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

அவருடைய கொடுமை தாங்காமல் ஒருகட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டதாக கூறிய அஞ்சலி அமீர் தற்போது அவரை விட்டு பிரிந்துவிட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் நான் பிரிந்து வந்துவிட்டதால் அந்த காதலர் போன் செய்து என் மீது ஆசிட் அடிப்பதாகவும் கொலை செய்துவிடுவேன் எனவும் நேரலையில் அழுது புலம்பினார்.

தன்னிடமிருந்து இதுவரை 4 லட்சம் ரூபாய் வாங்கி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்ட அஞ்சலி அமீர் பெற்றோர் உள்பட தனக்கு ஆதரவாக யாருமே இல்லை என்றும், காதலர் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.