அடிவயிற்றில் ரத்தம் சொட்ட சொட்ட நடனம்! பிரபல நடிகைக்கு பாடல் காட்சியில் ஏற்பட்ட விபரீதம்!

இந்தியில் பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் நடன நிகழ்ச்சியில் சிறப்பு நடுவராக இருந்து வருகிறார் மலைக்கா அரோரா.


இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது தன்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கேற்பட்ட நடன அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பேசுகையில் நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து நடனம் ஆடிய சய்யா  சய்யா என்ற  பாடலுக்கு நடனமாடிய தன்னுடைய     சுவாரசியமான  அனுபவங்களை  போட்டியாளரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தப் பாடலை முழுக்க முழுக்க ஓடும் ரயிலில் படம் பிடித்தனர். ஓடும் ரயிலில் நின்று ஆடுவது கடினம் என்பதாலும் என்னை சமநிலை படுத்த வேண்டும் என்பதாலும் என் வயிற்றில் கயிறு கட்டப்பட்டது.  இதன்மூலம் என்னால் எளிதாக ஓடும் ரயிலில் நடனமாட முடிந்தது. அந்தக பாடல் காட்சிகள் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டது.

படப்பிடிப்பு முடிந்தவுடன் என் வயிற்றில் இருந்த கயிற்றை அவிழ்க்கும் பொழுது என் வயிற்றில் கீறல்கள் ஏற்பட்டது. அதிலிருந்து ரத்தம் சிந்தியது. இவ்வாறாக மிகப்பெரிய கடுமையான உழைப்பின் மூலம் அந்த பாடல் காட்சிகள் அமைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை பார்த்த படக்குழுவினர்கள் இதற்காக  மிகவும் வருத்தப்பட்டனர். இவ்வாறாக தன்னுடைய நடன நடன அனுபவங்களை அங்கிருந்த போட்டியாளர்கள் மத்தியில்  மலைக்கா  பகிர்ந்து கொண்டார்.

 மேலும் மலைக்கா அரோரா சமீபத்தில்   தன்னுடைய விடுமுறை நாட்களை மிகவும் உற்சாகமாக அர்ஜுன் கபூருடன் இணைந்து  வெளிநாடுகளில்  கொண்டாடினார் அப்போது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவேற்றி ரசிகர்களிடம் இருந்து பலவிதமான கமெண்ட்களும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.