தோழியின் காதலன் மீது இன்ப வெறி! திருமணமான இளம் பெண் செய்த கொடூர கொலை! யாரை தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவர் தனது தோழியின் காதலனை அடையும் ஆசையில் விபரீத செயலில் ஈடுபட்டு சிக்கியுள்ளார்.


அவுரங்கபாத்தை அடுத்த பிசாதேவி என்ற இடத்தில் வயலில் எரிந்து கருகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சடலத்தின் அருகில் சோனாலி ஷிண்டே என்ற பெண்ணின் பெயரில் எழுதப்பட்டுக் கிடந்த கடிதத்தில் தனது கணவர் சதாஷிவ் ஷிண்டே தினமும் குடித்துவிட்டு தன்னைத் துன்புறுத்துவதாகவும், அதனால் தற்கொலை செய்துகொள்வதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இதையடுத்து சதாஷிவ் ஷிண்டே மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்நிலையில் ஹர்சுல் என்ற இடத்தைச் சேர்ந்த ருக்மண்பாய் மாலி என்ற பெண்ணைக் காணவில்லை என காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ருக்மண்பாய் மாலி இறந்து போனதாகக் கூறப்பட்ட சோனாலி ஷிண்டேவின் தோழி என்பதும், சோனாலி ஷிண்டே தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நாளில் இருந்து ருக்மண்பாயையும் காணவில்லை என்றும் தெரியவந்தது. இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது.

இறந்ததாகக் கூறப்பட்ட சோனாலி ஷிண்ட இறக்கவில்லை என்றும் அவர், தனது கள்ளக் காதலனான  சபாதாஸ் வைஷ்ணவ் என்பவருடன் ஷிர்டி, அகமத்நகர், நாசிக், சூரத் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் சாலிஸ்கான் என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையதில் சோனாலி ஷிண்டே தனது கள்ளக் காதலனுடன் பிடிபட்டார். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர உண்மைகள் வெளியாகின. சபாதாஸ் ருக்மண்பாயின் காதலன் என்றும் சோனாலி தனது தோழியின் காதலன் சபாதாஸை விரும்பியதும், சபாதாசும் சோனாலியை விரும்பியதும் தெரிய வந்தது. 

இந்நிலையில் தங்கள் ஆசைக்கு இடையூறாக இருந்த ருக்மண்பாயை இருவரும் திட்டமிட்டுக் கொலை செய்ததும், ருக்மண்பாயின் சடலத்துக்கு சோனாலி தனது ஆடைகள் நகைகளை அணிவித்து வயலுக்கு கொண்டு சென்று எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சோனாலியையும், சபாதாசையும் போலீசார் கைது செய்துள்ளனர்.