பெண்ணின் தலையில் விழுந்த வெட்டு... மாட்டிக்கொண்ட அரிவாள்! மருத்துவர்களை அலறவிட்ட சவால் சிகிச்சை

மகாராஷ்டிராவில் ஒரு பெண்ணின் தலைக்குள் புகுந்த அரிவாளால் அதிர்ந்து போனா மருத்துவர்கள் சாமர்த்தியாக வெளியில் எடுத்து அவரின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலத்தின் அசோலி கிராமத்தை சேர்ந்தவர் தான் மீரா பாய். இவருக்கு சுமார் 65 வயது இருக்கும். மீரா பாய் தனது வீட்டில் இரு தினங்களுக்கு உறங்கி கொண்டு இருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து மீராவின் வலது கண் வழியாக தலைக்குள் அரிவாளை கொண்டு வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டான். இந்நிலையில், மீராவின் தலைக்குள் அரிவாள் சென்ற நிலையில் வலியால் மிகவும் கதறினார்.மேலும், அவர் கதறியதை கண்ட அக்கம்பக்கத்தினர் மீராவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் முதலுதவி செய்து, பின்னர் அவர் தலையை ஸ்கேன் மற்றும் x ray செய்து பார்த்தனர். அப்போது x ray நகலை பார்த்த மருத்துவர்கள் அதிர்ந்து போயினர். அந்த அரிவாள் வெட்டு மீராவின் தலைகுள் சுமார் 9 செண்டி மீட்டர் ஆழத்துக்குள் சென்றதை கண்டு தான் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கு சரியான சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் என்று எண்ணி 5 மருத்துவர்கள் கொண்ட குழுவுடன் சுமார் 2 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு அரிவாளை வெளியில் எடுத்தனர்.

மிகுந்த சவாலுடன் இந்த அறுவை சிகிச்சை இருந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மூளைக்கு எந்தவொரு பாதிப்பு ஏற்படவில்லை, மீராவின் வலது கண்ணில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது, தொடர்ந்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவர்களின் தரப்பில் கூறினர்.