2015-2019ல் ரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி! மராட்டிய முதல்வர் அதிரடி!

மகராஷ்டிரா மாநிலத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உறுதி அளித்துள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கரும்பு பயிரிடுதல் குறித்த கருத்தரங்கத்தில் பங்கேற்ற முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இதனை தெரிவித்துள்ளார். 2015 ஏப்ரல் முதல், 2019 மார்ச் 31 வரை ரூ.2 லட்சம் வரை விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக குறிப்பிட்ட உத்தவ் தாக்கரே, 2019 செப்டம்பா் மாதம் வரை ரூ. 2 லட்சம் வரை நிலுவையில் உள்ள விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும், சா்க்கரை நிறுவன தலைவருமான சரத் பவார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தவுடன், விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் அளிக்க முடிவு செய்த மாநில அரசு ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, குறைந்த எம்எல்ஏக்களுடன் எவ்வாறு ஆட்சியமைக்க வேண்டும் என்பதை சரத் பவார் கற்றுத் தந்துள்ளார் என கூறினார்.

சா்க்கரை ஆலைகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் பெண்கள் பெரும்பாலும், கருப்பையை அகற்றிக்கொள்வது குறித்த விவகாரத்தில் முதல்வா் தலையிட வேண்டும் என மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சா் நிதின் ரௌத் வலியுறுத்தியுள்ளார்.

சா்க்கரை ஆலைகளில் தினக்கூலியாக பணியாற்றும் பெண்களால், மாதவிடாய் காலங்களில் பணிக்கு வர இயலவில்லை. அந்த காலங்களில் அவா்களுக்கு ஊதியம் கிடைப்பதில்லை. இந்த காரணத்துக்காக தங்களது கருப்பைகளை பெண்கள் அகற்றி விடுகின்றனா். இதுவரை சுமார் 30,000 பெண் ஊழியா்கள் கருப்பையை அகற்றியுள்ளனா். இவ்வாறு முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.