44 வயதில் முதலமைச்சர்! பால் தாக்கரே மகன் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய அதிரடி! யார் இந்த பட்னாவிஸ்?

மகாராஷ்டிரத்தில் பல குழப்பங்களுக்கு பிறகு திடீர் திருப்பமாக என்சிபி- பாஜக கூட்டணி உருவாகி 44 வயதில் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னவீஸ்.


தேவேந்திர பட்னவீஸ் 27 வயதில் மேயர், 44 வயதில் முதல்வர். இப்படி இளம் வயதில் சாதனைகளை புரிந்த இவர் யார் ? அப்படி என்னவெல்லாம் செய்துள்ளார் கட்சியில் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில். 

பாஜகவின் முதல் முதல்வர்.

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகாராஷ்ட அரசியல்வாதி தான் தேவேந்திர பட்னவீஸ் . நாக்பூர் மாவட்டத்தில் 1970-இல் ஜூலை 22-ஆம் தேதி பிறந்தவர் தேவேந்திர பட்னவீஸ். இவரது தந்தை கங்காதர் பட்னவீஸ் நாக்பூரில் இருந்து மகாராஷ்டிரத்தில் மேலவை உறுப்பினராக இருந்தார்.

இவர் பாஜக சார்ப்பில் மகாராஷ்ட மாநிலத் தலைவராகவும் நாக்பூர் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளனர். தனது 27 வயதில் நாக்பூர் நகர மேயராகவும் பணியாற்றி உள்ளார். மேலும், 2014 மகாராஷ்டாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களுக்குப் பிறகு தற்போது மகாராஷ்டிரத்தில் பாஜகவின் முதல் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் பதவியேற்றுள்ளார்.

என்சிபி- பாஜக கூட்டணி.

மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பமாக பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. மகாராஷ்டிராவின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றார் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராக அஜித் பவார் பொறுப்பேற்பு. ஆளுநர் பகத்சிங் கோசியாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பட்னவீஸ் மாநிலத்தில் பாஜகவின் முதல் முதல்வராக அறியப்படுகிறார். அதிலும் அவர் இளம் முதல்வர்களில் இரண்டாவது நபர் ஆவார்.

தேவேந்திர பட்னவீஸ் அரசியல் பயணம்.

1990-களில் தேவேந்திர பட்னவீஸ் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். பின்னர் பாஜக மாணவரணி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ராம்நகர் வார்ட்டில் நடந்த மாநகராட்சி தேர்தலில் முதல்முறையாக வெற்றி பெற்றார். 5 ஆண்டுகளுக்கு வார்டு உறுப்பினராக இருந்த பட்னவீஸ், நாக்பூர் மாநகராட்சியின் இளம் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய வரலாற்றில் இளம் வயது மேயர்களில் இரண்டாவது மேயர் என்ற பெருமையை பெற்றார் தேவேந்திர பட்னவீஸ்.

தேவேந்திர பட்னவீஸ் உரை.

முதல்வராக மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது மக்களின் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை. இது கிச்சடி கூட்டணியில்லை. நீண்டி நாள்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது - தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவி விழாவில் தெரிவித்தார்.