லாஜிக் முக்கியமில்லே, மேஜிக்தான் முக்கியம் என்கிறார் சுந்தர்.சி.! சினிமாவில் ஜெயிக்கும் வழி சொல்றார் கேளுங்க!

சினிமாவில் கதை செய்யும்போது ரொம்பவும் மெனக்கெட்டு லாஜிக் பார்க்க வேண்டியதில்லை,


அந்த லாஜிக்கில் ஓட்டை இருக்கிறது என்ற தெரியாத மேஜிதான் வேண்டும் என்று பேசியிருக்கிறார் சுந்தர்.சி. அவர் பேசியதில் முக்கியமான சில விஷயங்கள் மட்டும் இங்கே... ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், பென்ச் மார்க்காக ஏற்கனவே வந்த ஒரு படத்தை வைத்துக்கொள்ளுங்கள். காதலிக்க நேரமில்லை தான் உள்ளத்தை அள்ளித் தாவிற்கு பெஞ்ச் மார்க்.

-லொகேசனில் திடீர், திடீரென முடிவுகள் எடுக்க வேண்டிவரும். சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்க, சைக்காலஜிக்கலாக தயாராக இருக்க வேண்டும்.  ஒரு பக்கா திரைக்கதை அமைந்துவிட்டால், வெற்றி நிச்சயம். காட்சிகள் துண்டு, துண்டாக இருந்தால் ஆடியன்ஸ் படத்துடன் ஒன்ற முடியாது. எனவே சீகுவென்ஸ் போன்று சில சீன்கள் இருக்க வேண்டும். - காமெடி என்பது கதையை நகர்த்துவதாக, கதைக்குள் காமெடியாக இருக்க வேண்டும். கதையில் வரும் கேரக்டர் ஒன்று காமெடியனாக இருந்தால், ஆடியன்ஸ் படத்துடன் ஒன்றுவார்கள்.

வின்னர் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்படி, இடைவேளை வரைதான் வடிவேலு காமெடி வரும். ஆனால் வடிவேலுவின் நடிப்பும், பிரசாந்த் மார்க்கெட் டவுன் ஆனதும்தான், வடிவேலு படம் முழுக்க வரக் காரணம். ஹீரோ துதியில் இறங்காமல், படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். - லொகேசனில் கான்ஃபிடன்ஸுடன் வேலை செய்யுங்கள். யாருக்காகவும் பயப்படாதீர்கள். ரஜினி, கமல் போன்றோரின் வளர்ச்சிக்குக் காரணம் இயக்குநருக்கு அவர்கள் தரும் மரியாதை தான்.

லாஜிக்கை விட, சுவாரஸ்யமும் செண்டிமென்ட்டுமே முக்கியம். எல்லா சீன்களும் லாஜிக்காக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அருணாச்சலத்தில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மேனேஜர், ரஜினியை இரவு 12 மணிக்கு எழுப்பி வெளியே போகச் சொல்லும் சீன் இதற்கு உதாரணம். ஆனால், சினிமா எடுப்பதற்கான இலக்கணங்களை அறிந்துவிட்டு, பிறகு அதை மீறலாம். - சினிமா ஒரு விஷுவல் மீடியம். எனவே ஆடியன்ஸ் விஷுவலாக புரிந்துகொள்ளும் விஷயத்திற்கு, மைண்ட் வாய்ஸை யூஸ் பண்ணாதீர்கள். ஒரு நடிகரை மனதில் வைத்து திரைக்கதை எழுதாதீர்கள். கிடைத்த நடிகரின் பாடி லாங்குவேஜுக்காக, அந்த கேரக்டரை இம்ப்ரூவ் செய்யுங்கள்.

எப்போது ஒருவன் தன் இரு கைகளை மறக்கிறானோ, அப்போதே அவன் நல்ல நடிகன் ஆகிறான். - சினிமா என்பது கடைசிவரை செதுக்கிக்கொண்டே இருக்கவேண்டிய ஒரு விஷயம். டைட்டானிக், 40 நாட்களில் ஷூட்டிங் முடிந்த படம். எனவே தெளிவான திட்டமிடலுடன் இறங்கினால், 60 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிடலாம். ஒருநாளைக்கு 5 நிமிடத்திற்கான ஃபுட்டேஜ் எடுத்தால்கூடப் போதுமே!

பட்ஜெட்டை எப்போதும் மைண்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள். படம் ஓடினாலும், ஓவர் பட்ஜெட்டினால் நஷ்டம் வந்துவிடலாம். நன்றாக நேரம் எடுத்து, ப்ரி-புரடக்சன்/ப்ளானிங்கை பக்காவாக செய்துகொள்ளுங்கள். ஷூட்டிங்கில் இம்ப்ரூவ் செய்தாம் மட்டும் போதும். - விமர்சனத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கிறார்கள், அவ்வளவு தான். மீடியா, நெட்டில் வருவதைப் படிக்கலாம், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை. படத்தை முடித்தபின், அதை கரெக்ட் பண்ண முடியாது!

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் படைப்பாளிகள் இருப்பது நல்லது அல்ல. ஃபேஸ்புக் போன்ற வெகுஜன ஊடகத்தில், அதிக இன்வால்வ்மெண்ட்டுடன் இருக்காதீர்கள். அங்கே இருக்கும் 20% ஆடியன்ஸை திருப்திப்படுத்த படம் எடுத்தால், வெளியே இருக்கும் 80% ஆடியன்ஸை நாம் இழக்க வேண்டி வரலாம். ஒவ்வொருவருக்காக படம் எடுப்பது கஷ்டம். மெஜாரிட்டி மக்களுக்குப் பிடிக்கும்படியான விஷயங்களை படத்தில் வைத்தால் போதுமானது. ஒவ்வொருவரின் விமர்சனங்களைக் கண்டுகொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொரு படமும், முதல் படம் போன்ற பயம் இருக்க வேண்டும்.

-முதல் படம் பலவருட உழைப்பில் உருவாவது. அது ஜெயிப்பது எளிது. அதன்பிறகு, சர்வைவல் தான் கஷ்டம். ஒரு படம் ஓடினால், நான்குபேர் கைகொடுப்பார்கள். ஓடவில்லையென்றால், நாலாயிரம் பேர் துக்கம் விசாரிப்பார்கள். டைரக்சன் என்பது 24 மணிநேர வேலை. விழிப்புடன் வேலை செய்யுங்கள். யூடியூப் போன்ற இணையதளங்களில் டெக்னிகல் விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றைப் படித்து, நிறையக் கற்றுக்கொள்ளுங்கள்.

நல்லாத்தான் சொல்றார், படம் எடுக்கும்போது கோட்டை விடுறார்.