நீட் தேர்வை தடை பண்ணனும்..! சமமான கல்வி வேண்டும்..! ஐநாவில் முழங்கிய மதுரை தலித் இளம் பெண்!

மதுரை: நீட் தேர்வை தடை செய்ய வலியுறுத்தி, ஐ.நா சபையில் பேசிய மதுரை மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மதுரை மாவட்டம், கார்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா. இளங்கலை படித்துள்ள இவர், ஐ.நா சார்பாக,  கிராமப்புற பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி எப்படி உள்ளது என்பது பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படத்தில் பங்கேற்றிருந்தார்.

அதில், அவர் சிறப்பாகச் செயல்பட்டதை தொடர்ந்து, பிரேமலதாவை பாராட்டி, சில நாள் முன்பாக ஜெனிவா நகரில் நடந்த, ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பேச அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையேற்று, நேரில் சென்ற பிரேமலதா, ''அனைவருக்கும் சமமான கல்வி கற்கும் உரிமை வேண்டும்.

மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், சதிப்பாகுபாடுகள் பற்றி ஐ.நா சபையில் பேசினேன். குறிப்பாக, நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்துகொண்டதை விரிவாக எடுத்துரைத்து, கிராமப்புற மாணவர்களும், பட்டியலின மாணவர்களும் உயர்கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்,'' எனக் கூறுகிறார்.  

அவரது பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இளங்கலை படித்துள்ள அனிதா, சட்டப்படிப்பு படிக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.