மதுரை! திருவண்ணாமலை! கோவில்களில் திடீர் போலீஸ் குவிப்பு! பதற்றம்!

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 40க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு காவல் துறை ஆணையர் இன்று நேரில் ஆய்வு. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மதுரையில் ரயில் நிலையம், பஸ் நிலையம், முக்கிய கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்த பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இன்று மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட் தேவாசீர்வாதம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் கூடுதல் காவலர்களை நியமித்தது சம்பந்தமாக நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நான்கு சித்திரை வீதிகளிலும் சென்று உயர் காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.