சிக்கிடாரய்யா ‘எச்சச்சோறு’ புகழ் துரை தயாநிதி! அதிர்ச்சியில் அழகிரி

மதுரை கீழவளவில் கிரானைட் சுரங்க முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.


அழகிரியின் அன்பு மகன் துரை தயாநிதி நடத்தும் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் சட்டவிரோதமாக கிரானைட் தோண்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று அமலாக்கத்துறை மதுரை மற்றும் சென்னையில் இருக்கும் 25 அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் வைப்பு நிதியை முடக்கி உத்தரவு போடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 40.34 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் அரசியல் விவகாரம் தொடங்கி, சென்னை அணியின் கிரிக்கெட் போட்டி வரை அவ்வப்போது ட்வீட் போட்டுவரும் துரை தயாநிதி, இதற்கு என்ன போடப்போடுகிறார் என்று அனைவரும் குறிப்பாக தி.க. தலைவர் வீரமணி ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம்.