கணவரை பிரிந்து வாழும் மகளுக்கு இந்து மதத்தை சேர்ந்தவருடன் காதல்..! கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை! வெளியான அதிர்ச்சி காரணம்!

கணவரை பிரிந்து வாழும் மகள், மறுமணம் செய்ய சம்மதிக்காததாலும், இந்து மதத்தை சார்ந்தவரை காதலித்ததாலும் தந்தையால் கொல்லப்பட்ட கொடூரம் மதுரையில் நடைபெற்றுள்ளது.


மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் முகமது இஸ்மாயில் என்பவர் தையல் கலைஞர் ஆவார். இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர். மூத்த மகள் ரிஸ்வானா பானுவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்தார். ஆனால் கணவரை பிரிந்து வந்த ரிஸ்வானா பானு கடந்த 2 ஆண்டுகளாக தந்தையின் வீட்டில் இருந்துள்ளார்.

இதற்கிடையே கணவரிடம் இருந்து முறையான விவகாரத்தும் பெற்றுவிட்டார். இந்நிலையில் மகளுக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு தந்தை செய்தார். ஆனால் இந்த மறுமணத்தில் ரிஸ்வானா பானுவுக்கு விருப்பமில்லை என தெரிகிறது. இதையடுத்து மகளை மறுமணம் செய்து கொள்ளுமாறு தந்தை வற்புறுத்த அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவத்தன்று ரிஸ்வானா பானுவிடம் மறுமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுக்கவே அவரை கத்தியால் மகளின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரிஸ்வானா பானு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இஸ்மாயிலை கைது செய்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இது ஒருபுறம் இருக்க இந்து மதத்தை சார்ந்த ஒருவரை ரிஸ்வானா காதலித்ததாலேயே தந்தை எதிர்ப்பு தெரிவித்து கொலை செய்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.