என்ஜினியரிங் படித்துவிட்டு கவுன்சிலர் ஆன பட்டதாரி..! பதவி ஏற்றதும் சுவர் ஏறிக் குதித்து ஓடிய பரிதாபம்! பரபர காரணம்!

மதுரையில், சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலர் ஆன பொறியியல் பட்டதாரி வாலிபர் ஒருவர் பதவியேற்பு விழாவில் பதவியேற்றதும் திடீரேன சுவர் ஏறி குதித்து ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் திமுகாவினரும், இரண்டாம் இடத்தில் அதிமுகவினாரும் வெற்றிவாகை சூடியுள்ளனர். இந்நிலையில், இந்த உள்ளாட்சி தேர்தலில் பல அதிசிங்கள் நிகழ்ந்துள்ளன. அதுவும் குறிப்பாக சுயேட்சை அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, சுயேச்சையாக போட்டியிட்ட அரவிந்த் என்ற வாலிபர், 1300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

மேலும்,பொறியியல் பட்டதாரியான இவர் தாய், தந்தையை இழந்த நிலையில், தனது பாட்டியின் உதவியுடன் பொறியியல் படித்து, பின்பு வழக்கறிஞர் பட்டமும் பெற்றார். இந்த நிலையில், இன்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுவரும் நிலையில், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது 8-வது வார்டு உறுப்பினராக அரவிந்த்தும் பதவியேற்று கொண்டார்.

இந்த சூழ்நிலையில், இவ்வளவு படித்த, அரசியலில் பதவி பெற்ற இவர் பதவியேற்ற சில நிமிடங்களில் யாரும் எதிர்பாராத நேரத்தில், சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அந்த பகுதியில் சற்று பதற்றம் சூழ்நிலை நிலவியது.

இதற்கிடையே, பலருக்கும் இவர் ஏன்? இப்படி சுவர் ஏறி குத்தித்து செல்ல வேண்டும் என்று கேள்வி எழ? அதற்கு மற்றவர்கள் பல ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடங்களை கைப்பற்ற சுயேட்சைகளின் ஆதரவை பெற திமுக மற்றும் அதிமுக கட்சிகள் முயற்சி செய்து வரும் நிலையில் அந்த காரணத்திற்காக அரவிந்த் ஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது.

குரங்குக்கு வாக்குப்பட்ட மரத்துக்கு மரம் தாவித்தான் ஆகனும்! அரசியலுமா இப்படி என்ற கதை தான் ஏற்பட்டுள்ளது.