அதிவேகம்! முன்னால் சென்ற டிரக்! பிரேக்கிற்கு பதில் ஆக்சலேட்டர்! பஸ் டிரைவரால் பறிபோன 12 உயிர்!

மத்தியபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


மத்திய பிரதேச மாநிலத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதாக அங்கிருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.  

மகாராஷ்டிரா மாநிலம் ரேவா நகரிலிருந்து சித்தி மாவட்டம் நோக்கி காலை 7 மணியளவில் தனியார் பேருந்து கூத் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பழுதடைந்து சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், காயமடைந்த பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என பலமுறை அரசு அறிவுறுத்தியும் இதுபோன்ற கவனக்குறைவா அப்பாவிகள் உயிரிழக்க நேரிடுகிறது.