இது ஒரு உண்மை காதல் கதை! வெளிநாட்டு பெண்ணிடம் மனதை பறிகொடுத்த இளைஞன்! பிறகு நடந்தது!

ட்விட்டர் மூலம் இலங்கை பெண்ணை காதலித்து கரம்பிடித்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் அவர்களது காதல் நினைவாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் கோவில் பிரகாஷ் 26, அண்மையில் இவர் சமூக வலைதளத்தின் மூலம் இலங்கைப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர்களது காதல் நினைவாக தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தில் அவரது கருத்துக்கு கோவிந்த் பிரகாஷ் லைக் செய்துள்ளார்.

இந்நிலையில் அதே பதிவிற்கு இலங்கையைச் சேர்ந்த ஹன்சினி 25, என்பவரும் அதே பதிவை லைக் செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் நண்பர்களாக பழக தொடங்கியுள்ளனர். இருவரும் முதலில் நண்பர்களாக பழகி தொடங்கிய பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவர்களது நட்பு காதலாக மாற தொடங்கியது. இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த இளம்பெண் தனது முதுகலைப் படிப்பிற்காக இந்தியா வந்துள்ளார். அப்போது முதன்முதலாக பிரகாஷ் என்பவரை சந்தித்துள்ளார் முதல் சந்திப்பிலேயே அவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் தனது கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ஹன்சினி தங்களது காதல் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் இருவீட்டாரும் அவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து அவர்களின் விருப்பப்படி கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தங்களது காதல் நினைவாக பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அதில் ட்விட்டர் மூலம்தான் தங்களது காதல் மலர்ந்து இப்போது திருமண வாழ்க்கை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.