இந்தூர்: விஐபிகளுக்கு காலேஜ் படிக்கும் மாணவிகள் சப்ளை செய்யப்பட்ட விவகாரம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் படுக்கையில் கல்லூரி மாணவிகள்! வெளியான வீடியோ! அதிர்ச்சியில் உறைந்த மாநிலம்!
 
                                        
                                                                    
                				
                            	                            
ஹர்பஜன் சிங் (60 வயது) என்ற அரசு அதிகாரி சமீபத்தில் தன்னை 2 பெண்கள் வீடியோ எடுத்து மிரட்டுவதாக போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஹர்பஜன் உள்பட பல விஐபி நபர்களை குறி வைத்து இயங்கிய விபசார குழு ஒன்றை கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆபாச வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீடியோவில், மத்திய பிரதேசத்தின் விஐபிகள் பலரும் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன்பேரில், குறிப்பிட்ட விபசார குழுவின் தலைவியாகச் செயல்பட்ட ஸ்வேதா ஜெயின் என்பவரிடம் சிறப்பு விசாரணைக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர், பணம் சம்பாதிக்கும் நோக்கில், காலேஜ் படிக்கும் மாணவிகள் பலரை பயன்படுத்தி, மத்திய பிரதேசத்தின் முக்கிய விஐபிகளை செக்ஸ் மோசடி செய்து வீடியோவாக படம்பிடித்து மிரட்டி, பணம் பறித்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இதன்மூலமாக, அம்மாநிலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்வது, புதிதாக பணி அமர்த்துவது உள்ளிட்ட வேலைகளை செய்யும் அளவுக்கு அவர் வளர்ந்துள்ளார். அத்துடன், மத்திய பிரதேச அரசு வழங்கும் கான்ட்ராக்ட்கள் பலவற்றை ஸ்வேதா மற்றும் அவரது தோழி ஆர்த்தி ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களுக்கு பெற்று தந்துள்ளனர்.
தோண்ட தோண்ட விபசாரத்தின் அடிப்படையில் அரசு இயந்திரம் சீர்குலைக்கப்பட்ட பின்னணி இந்த விவகாரத்தில் வெளியாகி வருவதால், மத்திய பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
