ஆஸ்லோ: நார்வே நாட்டில் டைனோசர் போல பெரிய கண்கள் கொண்ட மீன் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால் தான் உடல்! பிரமாண்ட கண்! பிடிபட்டது டைனோசர் மீன்! அதிர்ச்சியில் மீனவர்கள்! எங்கு தெரியுமா?

நார்வேயில் உள்ள நோர்டிக் சீ ஆங்லிங் என்ற தனியார் மீன்பிடி நிறுவனத்தில், ஆஸ்கர் லுன்டால் (19வயது) என்பவர் மீன்பிடிக்க வழிகாட்டியாக பணிபுரிகிறார். இவர் சமீபத்தில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நடுக்கடலில் அந்தோயா எனும் தீவின் அருகே மிக விசித்திரமான முன் ஒன்றை பார்த்திருக்கிறார்.
அதனை பிடித்து, லுன்டால் ஆய்வு செய்திருக்கிறார். அதுபோல இதுவரை பார்த்திராத நிலையில், டைனோசர் போன்ற தோற்றத்தில் மிகப்பெரிய கண்களுடன் இருக்கும் அந்த மீன் மிகவும் வியப்பை ஏற்படுத்தியதாக, லுன்டால் குறிப்பிடுகிறார். இதுபற்றி ட்விட்டரில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் மிக வைரலாக பரவி வருகிறது.
இதுபற்றி தி சன் பத்திரிகை, ''அந்த மீன் ராட்ஃபிஷ் வகையை சேர்ந்தது. சுறா மீன் இனத்தை ஒத்த இந்த ராட்ஃபிஷ் 30 கோடி ஆண்டுகளாக பூமியில் வாழ்கிறது. சிங்கம் போன்ற தலை மற்றும் டிராகன் போன்ற வால் அமைப்பு கொண்டுள்ளதால், இதற்கு Chimaeras Monstrosa Linnaeus எனப் பெயர். இவை கடலுக்கு மிக அடியில் இருளில் வசிப்பவை, அரிதாகவே பொதுவெளியில் தென்படும்,'' எனக் குறிப்பிட்டுள்ளது.