நிர்மலா சீதாராமனுக்கு அடித்தது லக்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகிறார்!

பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கடந்த 2014ஆம் ஆண்டு அமைந்த மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தவர் நிர்மலா சீதாராமன். திறமையான செயல்பாடுகள் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சரானார். அப்பொறுப்பில் நிர்மலா சீதாராமன் சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்.

ரஃபேல் ஊழல் விவகாரங்களை எதிர்க்கட்சியினர் எழுப்பியபோது அதனைத் திறம்பட எதிர்கொண்டு மோடியிடம் நேரடியாக பாராட்டு பெற்றார். இதனால் இந்த நிலையில் அவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகவே நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் உடல்நிலையை காரணம் காட்டி அரசியலில் இருந்து ஒதுங்கி உள்ளார். இதைப்போல் பாஜக தலைவர் அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட உள்ளார். இதனால் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட வேண்டியுள்ளது.

எனவே ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்க நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதுகாப்பு துறை அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் வேறு வழியில்லாமல் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

பாதுகாப்புத்துறை இலாகா அழிக்கப்படுவதால் வருத்தமடைந்தாலும் வெளியுறவுத் துறை எனும் மிக முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளதால் நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.