குறைந்த கலோரியில் நிறைந்த சத்து தரும் மக்காசோளம்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான, சுவையான, சத்தான உணவுப்பொருள் என்றால் அது மக்காசோளம்தான். பாப்கார்னாக, கார ஸ்நாக்ஸ் என்று பல்வேறு வகையில் பயன்படுத்தப்படுகிறது.


·         சோளத்தில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், இரும்புசத்து, கரோட்டின் போன்ற சத்துக்கள் நிரம்பியிருப்பதால் உடலுக்கு வலுவூட்டவும் புத்துணர்வு கொடுக்கவும் பயன்படுகிறது.

·         உடல் குண்டாக இருப்பவர்களுக்கு குறைந்த கலோரியில் அதிகமான உணவுப்பொருள் தருவதால் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.

·         உடல் வளர்ச்சிக்கும் எலும்பு பலம் பெறவும், சுறுசுறுப்பு தருவதற்குமான ஊட்டச்சத்துகள் மக்காசோளத்தில் நிரம்பியுள்ளன.