லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்ட அழகிய இளம் பெண்! தப்பி ஓடிய காதலன் செய்த பகீர் செயல்! துரத்தி பிடித்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மும்பை: காதலியின் நடத்தை மீது சந்தேகமடைந்த காதலன் அவரை கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


மும்பை சான்டாக்ரூஸ் கிழக்குப் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இளம்பெண்ணின்  சடலம் கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், இறந்த பெண்ணின் பெயர் சந்தியா ஹரிஜன் என்றும், அவளுக்கு காதலன் ஒருவன் இருக்கிறான் என்றும் கண்டுபிடித்தனர்.

அந்த காதலனை தேடி அலைந்த வக்கோலா போலீசார், அவனது பெயர் விஜய் குமார் ஹரிஜன் என தெரிந்துகொண்டனர். அந்த நபரை சுற்றி வளைக்க முயன்றபோது, அவர் ஓடும் டிரக் ஒன்றில் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். ஆனால், காலில் அடிபட்ட நிலையில், அவரை போலீசார் பிடித்து, விசாரித்து வருகின்றனர்.  

விசாரணையில், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், காதலி மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அதன்பேரில் அவளை கொன்றுவிட்டதாக, விஜய் போலீசில் கூறியுள்ளான்.