8 வருட காதல்! கையில் மணமாலை! கடைசி நேரத்தில் காவல் நிலையில் காதல் ஜோடிக்கு நேர்ந்த விபரீதம்!

திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் பூமாலையோடு திருமணத்துக்கு காத்திருந்த காதல் ஜோடியை தற்கொலை நாடகமாடி காதலனின் தாய் பிரித்த நிலையில் தற்போது காதலன் கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறார்.


காவல் நிலையத்தின் முன் காதலர்கள் இருவரும் உறவினர்கள், நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திருமணம் நடைபெறப் போகிறது என்ற நம்பிய்க்கையுடன் காத்திருந்தவர்களுக்கு திடீர் அதிர்ச்சி. திருமணம் நடைபெற்றால் காவல் நிலையத்தின் முன் தீக்குளித்து தற்கொலை செய்யப்போவதாக காதலனின் தாய் மிரட்டல் விடுத்தார்.

காதலனின் கையில் இருந்த பூமாலை பிடுங்கி வீசப்பட்டது. மணமகன் குடும்பத்தார் மீது மணமகள் குடும்பத்தினர் சாபமிட்டனர். இந்த சம்பவங்களை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்தார். இந்நிலையில் காதலியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் மணமகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

விஷயம் இது தான் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலிக்கத் தொடங்கினர். அதன் பிறகு நிறுவனம் மாறினாலும் காதல் தொடர்ந்தது. இந்நிலையில் காதலனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வெளிநாடு செல்லும் முன் தன்ன்னை திருமணம் செய்ய காதலி வற்புறுத்தினார். 

அவர்கள் திருமணத்துக்கு பெண் வீட்டில் ஆதரவு இருந்தாலும் காதலனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து திருமணத்துக்காக காதலனையும் அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தை அணுகினார். அங்கு நடந்தவைதான் அனைத்தும்.  தன் குடும்பத்தார் பேச்சை கேட்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய அந்த நபர் மறுத்ததால் கைது செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறுதியில் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய மாப்பிள்ளை கம்பியெண்ணிக் கொண்டிருக்கிறார்.