பிக் பாஸ் வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு நோக்கத்துடன் தான் நிகழ்ச்சிக்கு உள்ளாக நுழைந்துள்ளனர் என்றாலும் கூட, அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் சிறிது தயக்கம் காட்டுவதும் சற்று சகஜம்ந்தான்.
பிக்பாஸ் வந்தது எதுக்கு? உண்மையை ஒப்புக் கொண்ட லாஸ்லியா! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன?

இந்த நிலையில் நேற்று நேயர் ஒருவர் (Frooti caller) நிகழ்ச்சிக்கு போன் கால் செய்ய ,அந்த நபர் லாஸ்லியாவிடம் தனக்கான கேள்வியை கேட்க விருப்பம் கொண்டார், இதற்கிடையில் அவர், லாஸ்லியா நீங்கள் எதற்க்காக பிக் பாஸ் நிகழ்ச்சி க்கு வந்தீர்களோ அது நிறை வேறியதா என கேள்வி எழுப்ப, விழிப்பிதுங்கி நின்றார் லாஸ்லியா,
சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, நான் பிக் பாஸ் வீட்டிற்க்குள் நுழைந்த காரணம் லாஸ்லியா என்ற பெயருடைய நான் யார் என மற்றவர்கள் தெரிந்துக் கொள்வதற்காக தான், மேலும், அதற்கான எந்த முயற்சியையும் நான் எடுக்கவில்லை, வந்த வேலையை விட்டு நான் வேறு பிரச்சனைகளை பார்த்து அதில் சிக்கி தவிப்பதாக அவர் தனது பதிலை பதிவுசெய்தார்.
ஏற்கனவே இது தொடர்பாக பல முறை கமல் லாஸ்லியாவை அறிவுறுத்தியும் அவர் அவருக்கான காதல் திட்ட வியூகம் வகுத்து அதனூடாக செயல்பட்டு வருகிறார், இது சரியான முன்னேற்றம் இல்லை என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தியுள்ளார் கமல் என்பதும் குறிப்பிடத்தக்கது.