கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் எதிரெதிரே மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கார் மீது கோரமாக மோதிய லாரி! தூங்கிக் கொண்டே ஓட்டிய டிரைவர்! பரிதாபமாக பறிபோன 2 உயிர்.
கள்ளக்குறிச்சி அண்ணாநகர் மேம்பாலம் அருகே கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரும் எதிரே வந்த லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் காரில் பயணம் செய்த ரங்கசாமி முருகன் என்பவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கார் ஓட்டுனர் சாமிநாதன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முருகன் மற்றும் ரங்கசாமி என்பவர் தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் வந்துள்ளனர். அவர்களது கார் அண்ணாநகர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த நிலையில் எதிரே வேகமாக வந்த லாரி காரின் மீது பலமாக மோதியது. இந்நிலையில் கார் தடுமாறி சாலை தடுப்பை உடைத்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.
இந்நிலையில் உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர் மற்றும் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் லாரி ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டி வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்தனர்.
பின்னர் லாரி ஓட்டுனரை கைது செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுனருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.