ஓடும் ரயிலில் ஆபாச படம் ஒளிபரப்பிய ரயில் ஓட்டுநரால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மெதுவா! மெது மெதுவா! ஓடும் ரயிலில் ஆபாச படம்! திக்குமுக்காடிய பயணிகள்!

இதுதொடர்பாக, பால் பிரண்டன் (Paul Brunton) என்பவர், ட்விட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், எனது ரயில் டிரைவர் ஜாலியாக பிட்டு படம் பார்த்துக் கொண்டு ரயில் ஓட்டுகிறார், எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுபற்றி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், சவுத் வெஸ்டர்ன் ரயில்வே ஊழியர் ஒருவர் இத்தகைய செயலை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ரயிலை ஓட்டும்போது, அந்த டிரைவர் சாதாரணமாக, ஆபாச படம் பார்த்திருக்கிறார். அது, எதிர்பாராவிதமாக, ரயிலில் உள்ள டிவி திரையில் ஓட தொடங்கியுள்ளது. சில நிமிடங்கள் வீடியோ ஓடிய நிலையில், அந்த டிரைவர் சுதாரித்துக் கொண்டு, ஆபாச வீடியோவை நிறுத்திவிட்டார்.
இதன்பேரில், தி சவுத் வெஸ்டர்ன் ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. அதில், தனது ரயில் சேவையில் இலவச வைஃபை வழங்கியிருந்தாலும், ஆபாச படங்கள் பார்க்க முடியாத அளவுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை, எனக் கூறப்பட்டுள்ளது.