நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் மூக்கு மற்றும் அந்த உறுப்பு! சமூக சேவகிக்கு வந்த விபரீத பிரச்சனை! அதிர்ச்சியில் டாக்டர்கள்!

லண்டன்: மூளையில் கட்டி இருப்பதால், கை, கால்கள் மற்றும் மூக்கு, கன்னம் தொடர்ந்து வளர்வதால் இளம்பெண் பீதியடைந்துள்ளார்.


கனடாவின் ஓன்டோரியா மாகாணம், சூட்பரியில் வசிக்கும் 29 வயது பெண் ரெபக்கா சூரான் என்பவருக்கே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு, மூளையின் முன்பகுதியான பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி உள்ளது. இதுபற்றி சரியாக தெரியாத காரணத்தால் ரெபக்கா சிகிச்சை எதுவும் செய்துகொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனால், உடலில் ஏற்படும் ஹார்மோன் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் பணியை பிட்யூட்டரி சுரப்பி செய்வதால் அதில் கட்டி ஏற்பட்டதை தொடர்ந்து, ரெபக்காவின் உடலில் ஹார்மோன் மாற்றம் தாறுமாறாக நிகழ்ந்திருக்கிறது.  

இதன்படி, 29 வயதான நிலையிலும், அவரது கை, கால்கள், மூக்கு, கன்னம் தற்போதும் வளர்ந்தபடியே உள்ளது. இதனால் நாளுக்கு நாள் ரெபக்காவின் தோற்றம் விகாரமாக மாறி வருகிறது. இதற்கான மருத்துவ சிகிச்சை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்ட ரெபக்கா ஒருவழியாக, முதலில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.

ஆனால், அவர்கள் தவறான சிகிச்சை அளிக்கவே, பலன் இல்லாமல் போனது. மறுபடியும், அதே மத்துவமனையில் முறையீடு செய்து, அவர்கள் படிப்படியாக, மாற்று சிகிச்சைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதன்படி, ரெபக்காவின் மூக்கு, கன்னம் உள்ளிட்டவற்றின் அளவு குறைக்கப்பட்டதோடு, பிட்யூட்டரி சுரப்பியில் உள்ள கட்டியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், தனது தோற்றம் பழைய நிலைக்கு திரும்பும் என நம்புவதாக, ரெபக்கா தெரிவிக்கிறார்.  

இத்தகைய ஹார்மோன் கோளாறு அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகளில் வசிக்கும் மக்களுக்கு, கடந்த 15 ஆண்டுகளாக, அதிகளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.