கருவிலேயே உயிரிழந்த 3 குழந்தைகள்! காரணம் கர்ப்ப பையில் சுரந்த விஷம்..! இளம் கர்ப்பிணியின் நிலையால் அதிர்ந்த டாக்டர்கள்!

லண்டன்: கருப்பையில் அதிக அமிலம் சுரப்பதால் இளம்பெண் ஒருவர் அடிக்கடி அபார்ஷன் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


ஆம், மனித உடல் அவ்வப்போது விந்தையானது. இதில் நவீன மருத்துவ தொழில்நுட்பங்களால் கூட மதிப்பிட முடியாத அளவுக்கு வித விதமான மாற்றங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்றாகும். இதன்படி, லண்டனை சேர்ந்த கேலி ஹயிஸ் (22 வயது) எனும் இளம்பெண், கடந்த சில ஆண்டுகளாக, குழந்தை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக, தனது காதலனுடன் உடலுறவு கொண்டு, 2 முறை கர்ப்பம் தரித்த ஹயிஸ்க்கு, அந்த கரு முழுதாக வளர முடியாமல் சில நாட்களிலேயே கலைந்துவிடும் நிலை உண்டானது.  

அடிக்கடி கர்ப்பம் கலைவதற்கு என்ன காரணம் எனத் தெரியாமல் ஹயில், மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை கேட்டார். அவர்கள் இதுபற்றி ஆய்வு செய்தபோது, அவருக்கு Hydrosalpinx எனப்படும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறிந்தனர். இதன்படி, அவரது கருப்பையில் உள்ள ஃபாலோபியன் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, நீர் சரியாக இயங்காமல்  அதில் இருந்து அமிலம் மட்டும் அதிகளவில் கருப்பைக்குள் செல்கிறது.

இப்படி அமிலம் அதிகளவு செல்வதால், கருப்பை ஒரு ஆசிட் தொட்டி போல மாறி, அதில் வளரும் கருவை படிப்படியாகச் சிதைத்துவிடுகிறது. இப்படித்தான் ஹயிஸ்க்கு 2 முறை அபார்ஷன் ஆகியுள்ளதாக, மருத்துவர்கள் கண்டறிந்தனர்.  

இதன்பேரில், தற்போது அவரது இடது புற ஃபாலோபியன் குழாயை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர். இதன்மூலமாக, எதிர்காலத்தில் அவர் குழந்தைப்பேறு எட்ட முடியும் என்றும், கருவிற்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.