எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்..! காரணம் ரெண்டே ரெண்டு உணவு தான்..! இளம் பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

லண்டன்: சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் நிறுத்தியதால் சோரியாசிஸ் நோயாளி உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.


பிரிட்டனின் நோட்டிங்காம் பகுதியை சேர்ந்தவர் பிரிஸிஸ் லுன் (29 வயது). இவர், சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடல் முழுக்க சிவந்த, தடித்த தேமல் காணப்பட்ட நிலையில், கடந்த 2012ம் ஆண்டில் இருந்து பலவிதமான மருந்து, மாத்திரைகள், லோஷன்களை அவர் சிகிச்சைக்காக எடுத்து வருகிறார்.  

மருத்துவ டயட் காரணமாக எரிச்சலடைந்த பிரிஸிஸ், கடந்த சில வாரமாக, மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். அத்துடன், சர்க்கரை கலந்த உணவுகள், பால் பொருட்களையும் அவர் சாப்பிடவில்லை எனக் கூறப்படுகிறது. இன்டர்நெட்டில் படித்த மருத்துவக் குறிப்பு ஒன்றில் இவ்வாறு கூறப்பட்டிருந்ததால், அதனை பின்பற்ற விரும்பிய பிரிஸிஸ் இவ்வாறு செய்திருக்கிறார்.  

இதன்படி, ஆச்சரியமூட்டும் வகையில் அவரது முகம் உள்பட உடல் முழுக்க காணப்பட்ட சிவந்த, தடித்த தேமல் அறிகுறிகள் அப்படியே மறைந்துவிட்டன. அவரது முகம் இயல்பு நிலைக்கு திரும்பியதோடு, உடலும் இயல்பாக மாறியுள்ளது. இதனை அவரால் நம்பவே முடியவில்லை. இதுபற்றி மருத்துவர்களிடமும் பரிசோதித்த பிரிஸிஸ், உடல் முழுக்க இருந்த சோரியாசிஸ் அறிகுறிகள் அகன்றுவிட்டதாக உறுதி செய்திருக்கிறார். இதனை நம்பவே முடியவில்லை எனக் கூறும் அவர், சோரியாசிஸ் நோய் பாதிக்கப்பட்டவர்கள் தன்னை பின்பற்றி உணவுக்கட்டுப்பாடு செய்து, நோய் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.