உள்ளாட்சி தேர்தல்! தேனியில் இளைஞர் காங்கிரஸ் போட்ட தனிக்கூட்டம்!

தேனியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் யுவராஜா .கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினார்.


தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெறும் உள்ளாட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் யுவராஜா தேனி மாவட்டத்தில் .கட்சியினுடைய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டம் தேனி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில்.தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிகமான இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் சிறப்பாக செய்ய வேண்டும் .

கட்சி மேலிடம் யாரை தேர்வு செய்து வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் பேசினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த யுவராஜா.. கவுகாத்தியில் 144 தடை உத்தரவை போட்டு பிஜேபி.க்கு வாக்களித்த மக்களுக்கு பிஜேபி அரசு துரோகம் செய்து விட்டது.

இந்த அரசு துரோக அரசு. அதேபோல ஒரே நாடு .ஒரே இந்தியா .ஒரே மொழி. ஒரே ஜாதி. என்று கொண்டுவந்த அஜெண்டாவை வெற்றிகரமாக செயல்படுத்த அமித்ஷாவும். மோடியும் துடிக்கிறார்கள் இந்த நிலை நீடித்தால் விரைவில் அமித்ஷாவுக்கும் மோடிக்கும் எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கை விடுத்தார்..

தமிழகத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலை பொறுத்தவரையில்ஆளுங்கட்சியினுடைய பணபலம் அதிகாரபலம்மூலமாக வெற்றி பெறுவது என்பது நிதர்சனமான உண்மை. ஆனால் பொதுத் தேர்தல் என்று வந்துவிட்டால் அதிமுக படுதோல்வி அடையும் என்றும் கூறினார்இந்த ஆலோசனை கூட்டத்தின்போது .

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகி ஜெமி மேத்தா தேனி மாவட்ட பொருப்பாளர் நவீன்.பெரியகுளம் சட்டமன்ற பொருப்பாளர் ஜஹாங்கீர் உட்பட மாவட்ட .ஒன்றிய .நகர நிர்வாகிகளும். தொண்டர்களும் திரளாக கலந்து கொண்டனர்.