இன்னும் 15 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிடும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் சொல்லி கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிவிட்டது.
உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 28 என்பது உண்மைதானா?
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக டிசம்பர் மூன்றாவது வாரத்தில்தான் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடக்கும்.
எனவே, அந்தத் தேர்வு விடுமுறையான கடைசி வாரம் அதாவது டிசம்பர் 27 மற்றும் 28ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. இதற்காக உள்ளாட்சித் தேர்தலின் போது பணியாற்றக்கூடிய 6 லட்சத்து 50 ஆயிரம் தேர்தல் பணியாளர்களின் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்புகளிடம் கேட்டுள்ளது.
மேலும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக் கல்லூரிகளின் தேர்வு அட்டவணைகளும் கோரப்பட்டுள்ளன. அரசு ஒப்புதல் கொடுக்கும் பட்சத்தில் இந்தத் தேதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தேர்தல் தேதி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.