தடுமாறி கீழே விழ இருந்த காதலி! உதட்டை கவ்வி காப்பாற்றிய காதலன்! இது பல்லிகள் காதல்!

தவறி விழும் பல்லியை வாயால் கவ்வி காப்பாற்றும் மற்றொரு பல்லி வீடியோ.


சுவற்றில் இருந்து தவறி விழும் பல்லியை தனது வாயால் கவ்வி காப்பாற்ற முயற்சிக்கும் மற்றொரு பல்லியின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

வியட்நாமில் உள்ள டே நின்ஹ் என்னும் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜேக்கோ எனும் சில வகை பள்ளிகள் சுவற்றில் சுற்றித் திரிந்துள்ளன. அப்போது சுவற்றில் இருந்து தவறி விழும் தருவாயில் ஒரு பல்லி இருந்தது.

இதனை மற்றொரு பல்லி கண்டு வேகமாக வந்து தனது வாயால் கவ்வி காப்பாற்ற முயற்சித்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இப்போது அந்த வீடியோ படு வைரலாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. 

மனிதர்களாக இருக்கும் நாம் இவற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது என பலரும் மேற்கோலிட்டு காட்டி வருகின்றனர்.