கேஸ் சிலிண்டரால் ஒரே அடி! கதறித்துடித்த காதலி! மகள் முன்னிலையில் காதலன் அரங்கேற்றிய வெறிச் செயல்! பதற வைக்கும் காரணம்!

பெங்களூரு: வேறு நபருடன் தொடர்பு உள்ளதாக சந்தேகப்பட்டு, தனது காதலியின் தலையில் சிலிண்டர் போட்டுக் கொன்ற காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோலார் மாவட்டத்தில் உள்ள முலபாகல் பகுதியை சேர்ந்தவர் வெங்கட கிரியப்பா. 30 வயதாகும்  பெங்களூருவில் பணிபுரியும் இவர் ஏற்கனவே திருமணமாகி குடும்பத்தை விட்டு பிரிந்தவர் ஆவார். தற்சமயம் வாடகைக்கு தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும், வெங்கட கிரியப்பா, திருமணம் செய்யாமலேயே 26 வயதான சசிகலா என்ற பெண்ணுடன் லிவ்-இன் டுகெதர் உறவுமுறையில் வாழ்ந்து வந்தார். அந்த பெண்ணுக்கு, ஏற்கனவே திருமணமாகி, கணவர் இறந்த நிலையில், 3 வயதில் ஒரு மகள் உள்ளார்.  

லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழும் இவர்கள், வெளி உலகிற்கு, உண்மையாலுமே திருமணம் செய்துகொண்டவர்கள் போல நடித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் புதன்கிழமை சசிகலாவுக்கு, வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக, வெங்கட கிரியப்பா சந்தேகப்பட்டு, அவரை அடித்துள்ளார். இதனை அண்டை வீட்டார் தலையிட்டு, சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனாலும் ஆத்திரம் தீராத வெங்கட கிரியப்பா, சனிக்கிழமை நள்ளிரவில் சசிகலாவை அடித்து உதைத்துள்ளார். வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தால், அண்டை வீட்டாரால் உதவ முடியவில்லை.  

உள்ளே பிரச்சனை தீவிரமடைவதை அறிந்த அண்டை வீட்டார் இதுபற்றி வீட்டின் உரிமையாளர் ராயப்பாவிற்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் வருவதற்குள், சமையல் அறையில் இருந்த சிலிண்டரை தூக்கிப் போட்டு, சசிகலாவை வெங்கட கிரியப்பா கொன்றுவிட்டார்.  

போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சசிகலா தலை நசுங்கி இறந்து கிடந்தார். விசாரணையில், இவர்கள் 2பேரும் கணவன் மனைவி போல ஏமாற்றி வந்த உண்மை தெரியவந்தது. உடனடியாக, அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சண்டையில் அனாதையாகிப் போன 3 வயது குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.