பெற்ற தாய் என்றும் பாராமல் கதற கதற பலாத்காரம் செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெற்ற தாயுடன் கட்டாய பாலியல் வல்லுறவு! இளைஞனுக்கு பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

வதோதரா பகுதியை சேர்ந்த 42 வயது நபர், தனது மனைவியை பிரிந்து, தாயுடன் வசித்து வருகிறார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான அந்த நபர், கடந்த 2017, அக்டோபர் மாதத்தில், போதை தலைக்கேறிய நிலையில், தாய் என்றும் பாராமல், தனது 60 வயது விதவை அம்மாவை கதற கதற பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த தாய், தனது மகள் வீட்டிற்குச் சென்று, இந்த கொடூரத்தை விவரித்துள்ளார். இதன்பேரில், உள்ளூர் போலீசில் புகார் தரப்பட்டது. பின்னர், போலீசார் கைது செய்து,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையின் முடிவாக, வதோதரா கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி எம்.கே.சவுகான், தற்போது தண்டனை விவரத்தை அறிவித்துள்ளார். இதன்படி, அந்த நபருக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.