குட்டைப் பாவாடை குட்டிகளுடன் கெட்ட ஆட்டம்! சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் வீடியோ வைரல்!

லெஜன்ட் சரவணாவை தமிழகத்தில் தெரியாதவர் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு விளம்பரம் ,விளம்பரம் என ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் டிவியில் தோன்றி விடுவார் அவர்.


சென்னையில் உள்ள பிரபல விற்பனை அங்காடியின் ஓனராக இருப்பவர் தான் இந்த லெஜன்ட். ஆனால் தற்போது 50 வயதிற்கு மேல் ஆனாலும் இன்னும் இளமையாக தன்னை காட்டிக் கொள்ளும் அளவிற்கு படுஜோராக உழைத்து வருகிறார்.

 அவர் வியாபாரத்திலும் அவரது பிசினஸில் கொடிகட்டிப் பறந்து சென்னை முழுவதும் பல கிளைகளை துவக்கி இருக்கும் சரவணா தன்னுடைய கடை விளம்பரத்தில் தானே நடிப்பேன் என்று கூறி பல அட்டகாசங்களை செய்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர் கடை விளம்பரத்தில் இவரை மாடலாக நடித்தது கலாய்க்கப்பட்டாலும் போகப்போக, விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டது.  இந்நிலையில் ஒரு வெற்றிகரமான மாடலாக வலம் வந்த அவர் தற்போது தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற செய்திகள் வலம் வந்துகொண்டிருக்கிறது.

சமீபத்தில் தமிழ் சினிமா கலைஞர்கள் சார்பில் மலேசியாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் அவர் ஒரு கோடி ரூபாய் ஸ்பான்சர் செய்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தன்னை தமிழ் சினிமாவில் இணைத்துக் கொண்டுள்ளார் லெஜன்ட். இந்த நிலையில் குட்டைப்பாவாடை குமரிகளுடன் அண்ணாச்சி வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.