மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மருத்தவமனையில் கவலைக்கிடமாக உள்ளது.
ராஞ்சி மருத்துவமனையில் லாலு பிரசாத் கவலைக்கிடம்! பீகாரில் பதற்றம்!

சிறையில் இருந்த போது உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவ் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தனது மனைவி ஐஸ்வர்யா ராயிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த தகவலை அறிந்தது முதலே லாலுவின் உடல் நிலை
மிகவும் மோசமானது. அதுவும் மூத்த மகன் திருமணம் ஆகி ஆறு மாதங்களுக்குள் விவகாரத்து
கோரியதை லாலுவால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் லாலுவின் கால்
தொடையில் சிறிய காயம் ஏற்பட்டு சீல் கட்டியுள்ளது. எவ்வளவோ மருந்து கொடுத்தும்
அதனை சரி செய்ய முடியவில்லை.
இந்த சூழலில் லாலுவின் உடலில் சர்க்கரை அளவும் அபாயகரமான அளவிற்கு உயர்ந்து வருகிறது. மேலும் உடலின் ரத்த அழுத்தமும் சீராக இல்லை. அத்துடன் லாலுவின் உடலில் ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் சராசரி அளவை விட குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு லாலுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லாலுவின் மனைவி மற்றும் உறவினர்கள்
மருத்துவமனையில் திரண்டுள்ளனர். லாலுவின் உடல் நிலை மோசமான தகவல் அறிந்து பீகாரில்
ஆங்காங்கே பதற்றம் நிலவ ஆரம்பித்துள்ளது. இதனிடையே லாலுவுக்கு ஏற்பட்டுள்ள
பிரச்சனை குணப்படுத்த தக்கது தான் என்றும் யாரும் பயப்பட தேவையில்லை என்றும்
மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருந்தாலும் பீகாரில் பதற்றம் நீடிக்கிறது.