வீட்டுக்குள்ளேயே பல கெட்டப் வேடங்கள் போட்ட லல்லுபிரசாத் மகன்! மனைவியின் அதிரடியால் வீதிக்கு வந்த விவகாரம்!

வீட்டுக்குள்ளேயே வேஷம் போட்ட லல்லு மகனின் லொள்ளு! மனைவியின் மனுவில் ஜுனியர் லல்லுவின் அதிரடி காமெடிகள் அம்பலம்!


முன்னாள் பீஹார் ஹெல்த் மினிஸ்டராக இருந்தவர் இப்போது ஊழல் வழக்கில் சிறையிலிருக்கும் லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ்.இவரது மனைவியின் பெயர் ஐஸ்வர்யா ராய்.தேஜ் பிரதாப்பும் அவரது குடும்பத்தினரும் தனக்கு உடலளவிலும் மனதளவிலும் வேத்ல்னை அளித்ததாகவும், தனக்கு குடும்பத்தை பார்த்துக் கொள்வதும் குழந்தை பெற்றுக் கொளவதும் மட்டுமே வேலை என்று சொல்லி அவமானப்படுத்தியதாக ஐஸ்வர்யா சொல்லி இருந்தார்.

இதை மறுத்து லல்லுவின் மகன் சமர்ப்பித்த மனுவுக்கு பதிலாக இப்போது ஐஸ்வர்யா கொடுத்திருக்கும் பதில் மனுவில் லல்லுவின் மகனைப் பற்றி பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளிவந்து இருக்கின்றன. தனது கணவர் தீரஜ் பிரதாப் யாதவுக்கு போதைப் பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருப்பதை தான் திருமணம் ஆன பிறகே தெரிந்து கொண்டதாக சொல்லி இருக்கிறார்.

அத்துடன்,போதையில் இருக்கும் போது தேஜ் பிரதாப் தன்னை சிவனுடைய அவதாரமாகக் கருத்திக்கொள்வார் என்றும்,அது மட்டுமல்லாமல் அவர் கிருஷ்ணன் போலவும் ராதை போலவும் வேடமிட்டுக் கொள்வாராம்.ஒரு முறை தேஜ் பிரதாப் காக்ரா பாவாடையும் சோளியும் அணிந்து விக் வைத்துக் கொண்டு தன்னை ராதாவின் அவதாரம் என்றாராம்.

லல்லு பிரசாத் ராப்ரி தேவி தம்பதியின் மூத்த மகனான தேஜ் பிரதாபுக்கும் ஐஸ்வரியா ராய்கும் திருமணம் நடந்தது கடந்த 2018 மே மாதம்தான்.இது குறித்து தனது மாமியாரிடமும் தேஜ் பிரதாப்பின் உடன் பிறந்தோரிடமும் சொல்லிப் பாத்த்தேன் அவர்கள் தனக்கு உதவவில்லை என்கிறார்.

ஒரு முறை தேஜ் பிரதாப்பை இனிமேல் போதைப் பொருள்களை பயன் படுத்தாதே என்று தாம் கண்டித்தபோது ' கஞ்சா சிவனுடைய பிரசாதம் , அதை நான் எப்படி மறுக்க முடியும்' என்றாராம்.

இதில் ,இந்த தேஜ் பிரதாப் பீஹாரின் ஹெல்த் மினிஸ்ட்டராக வேறு இருந்திருக்கிறா.வாயில்லா ஜீவன்களின் தீவனத்தில் ஊழல் செய்து சிறையிலிருக்கும் லல்லு இன்னும் என்னவெல்லாம் பார்க்கவேண்டி இருக்குமோ!