லலிதா ஜீவல்லரி நகைகடை கொள்ளையர்களை ஒத்தையாக ஓடி பிடித்த போலீஸ் , குவியும் பாரட்டுகள்.
நான் லோக்கல்ங்க..! சரிடா கீழ இறங்கு! லலிதா ஜூவல்லரி கொள்ளையனை பிடித்த எஸ்ஐ பாரதநேருவின் ஒற்றை வார்த்தை! எப்படி தெரியுமா?

திருச்சி லலிதா ஜீவல்லரி நகை கடையில் சுமார் 13 கோடி மதிப்பிலான நகைகள் திருடபட்டதை அடுத்து, போலீசார் தரப்பில் 7 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் , தஞ்சாவூரில் நடைபெற்ற இருந்து திருவாரூர் நுழையக்கூடிய இடத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர், கொள்ளையில் சம்மந்தபட்டவர்களும் தற்போது கைது செய்யபட்டு உள்ளார்கள்.
மணிகண்டன் மற்றும் சுரேஷ் இருவரும் அந்த பைக்கில் வந்தவர்கள் தான், "சார் நாங்க லோக்கல் தான் இங்க பக்கத்துல போய்ட்டு வரோம்னு " கேசுவலா சொல்ல, அவங்க கையில் இருந்த விலை உயர்ந்த சூட்கேசை பார்த்து சந்தேகமடைந்த சப் இன்ஸ்பெக்டர் பாரத நேரு, பெட்டியை திறக்க சொல்லி கேட்க, உசாரான இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதனால் சந்தேகமடைந்த சப் இன்ஸ்பெக்டர் நேரு, உடனடியாக சுதாரித்துக்கொண்டு, வாகனத்தில் 1 கி மீட்டர் வரை துரத்தி சென்று பிடித்துள்ளார். மணிகண்சன் பெட்டியுடன் சிக்கி கொள்ள, பின்னர் பெட்டியை திறந்த போது லலிதா ஜீவல்லரிக்கு சொந்தமான 5 கிலோ நகைகள் கிடைக்கபெற்றதை அடுத்து, போலீசார் விசாரணை வளையத்திற்க்கு கொண்டு சென்றுது.
தப்பிய சுரேஷ் உட்பட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வரும் 18 ஆம் தேதி, அக்டோபர் மாதம்.வரை காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ள நிலையில் அடுத்தகட்டமாக முக்கிய குற்றவாளியான முருகனை தேடி ஆந்திரா விரைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் துணிச்சலாக செயற்பட்ட பாரத நேருவை சமூக வளைதளங்களில் கொண்டாடி வர நிலையில், அவருக்கு காவல் துறை சார்பில் பாரட்டு சான்றிதழ் வழங்கபட்டுள்ளதும் குறிப்பிடதக்கது.