ரயில் தண்டவாளத்தில் சிக்கிய இருசக்கர வாகனம்! கடைசி நொடியில் தப்பிய தாயும் குழந்தைகளும்! சென்னை அதிர்ச்சி

சென்னையில் மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் நடுவழியில் பழுதானதால் அதிர்ச்சியடைந்த பெண்மணி சாதுர்யமாக செயல்பட்டு தனது இரு குழந்தைகளையும் காப்பாற்றியுள்ளார்.


சென்னை கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் ரயில் வருவதற்காக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்று வரிசையாக நின்ற போது அவ்வழியே வந்த பெண்மணி ஒருவர் ரயில்வேகேட் பூட்டி இருந்த நிலையிலும் கேட்டை கடக்க முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் அவரது இருசக்கர வாகனம் திடீரென பழுதாகி பாதியிலேயே நின்றது இந்நிலையில் மிகவும் சாதுர்யமாக செயல்பட்ட அப்பெண் தனது இரு குழந்தைகளுடன் உயிர் தப்பியுள்ளார். எதிர்பாராதவிதமாக அவரது இரு சக்கர வாகனம் ரயிலில் அடித்துச் செல்லப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ரயில்வே கேட்டில் நேற்று காலை ரயில் வருவதற்காக கேட் பூட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில்  அப்பகுதியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சுமதி என்ற பெண்மணி தனது இரு சக்கர வாகனத்தில் தனது 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு பள்ளியில் விட சென்றுள்ளார்.

அப்போது ரயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அதை கண்டுகொள்ளாத சுமதி தண்டவாளத்தை கடக்க தனது இருசக்கர வாகனத்தில் தனது இரு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்போது நடு வழியில் திடீரென அவரது இரு சக்கர வாகனம் நடு தண்டவாளத்தில் பழுதாகி நின்றது. அப்போது தூரத்தில் ரயில் வருவதை பார்த்த சுமதி வாகனத்தை நகர்த்தியுள்ளார்.

இந்நிலையில் வாகனம் நகராத நிலையில் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.பின்னர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்ட சுமதி தனது இரு குழந்தைகளுடன் ரயில் தண்டவாளத்தை கடந்து வந்துவிட்டார். பின்னர் அவரது இரு சக்கர வாகனத்தை ரயில் வந்து அடித்துச் சென்றது. இருசக்கர வாகனத்தின் பாகங்களை அகற்றும் பணி முடிவடையும் வரை அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.