நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எங்கேயோ மச்சம்! 3வது முறையாகவும் ஓகே சொன்ன நயன்தாரா!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிகை நயன்தாரா மூன்றாவது முறையாக ஓகே சொல்லியுள்ளார்.


இயக்குனர் எம் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்து இருந்தார். இதைத் தொடர்ந்து எம் ராஜேஷ் இயக்கியுள்ள மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு நயன்தாரா தான் ஜோடி. இந்த படம் உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் மூன்றாவது முறையாக நயன்தாரா ஜோடி சேர உள்ளார். சிவகார்த்திகேயனின் 17ஆவது திரைப்படமான இதை, நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கவுயுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். நயன்தாரா இருந்தாலே அந்தப் படம் ஹிட்டுதான் என்ற அதிர்ஷ்டம் நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. அது இந்தப் படத்திலும் கைகொடுக்கும் என கருதப்படுகிறது.