செக்ஸ் வெறி பிடித்த கிளி ஜோசியருக்குப் பயந்து தூக்கில் தொங்கிய சங்கீதா - அனாதையாக நிற்கும் குழந்தைகள்

குளித்தலை: கிளி ஜோசியரின் செக்ஸ் தொல்லை தாங்காமல் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டம் தோகைமலை ஆத்துப்பட்டியை சேர்ந்தவர் சங்கீதா. 29 வயதாகும் இவருக்கு, 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது கணவர் தங்கவேல் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால், குழந்தைகளை வைத்துக் கொண்டு, சங்கீதா தனியாக வசித்து வந்திருக்கிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அண்டை வீட்டில் வசிக்கும் கிளி ஜோசியர் சங்கர், சங்கீதாவிற்கு செக்ஸ் டார்ச்சர் தர தொடங்கியுள்ளார். 

அடிக்கடி அவர் தந்த தொல்லை காரணமாக, வெறுப்படைந்த சங்கீதா, ஊரை காலி செய்துகொண்டு, கீழ் வெளியூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனாலும் விடாத கிளி ஜோசியர் அவரை பின்தொடர்ந்து சென்று, செக்ஸ்க்கு இணங்கும்படி வலியுறுத்தி வந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கீதா, திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதன்பேரில், சங்கீதாவின் தம்பி சதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.