மும்பையில் மோப்ப நாய் பிரிவு பெண் காவலரை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததாக அந்தப் பிரிவு ஊதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தகாத இடத்தில் டச்! ஆண் போலீஸ் மீது பெண் போலீஸ் பகீர் புகார்!

மும்பை காவல் துறை குற்றப் பிரிவு மோப்ப நாய் பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பவர் வினோத் பல்லால். இந்தப் பிரிவில் மோப்ப நாயைக் கையாளும் காவலராக 24 வயது இளம் பெண் ஒருவர் வினோத் பல்லாலின் கீழ் இந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் வினோத் மீது அந்தப் பெண் அளித்த புகாரில் அவர் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன்னை தவறான இடங்களில் தொட்டதாகவும், தனது வீடு இருக்கும் இடத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். பொறுத்துப், பொறுத்துப் பார்த்த நிலையில் நிலைமையை சகிக்க முடியாத நிலையை எட்டியதையடுத்து புகார் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்தப் பெண்ணின் புகாரில் வினோத் பல்லாலை கைது செய்த போலீசார் பாலியல் அத்துமீறல், பின் தொடர்ந்து தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். எனினும் அவர் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவில் கைது செய்யப்பட்டதால், தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.