பெண் நோயாளிக்கு மயக்க மருந்து! செக்ஸ் சீண்டல்! அப்பல்லோ மீது பகீர் புகார்!

சென்னை பெருங்குடியில் அப்பலோ மருத்துவ மனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கபட்ட பெண் நோயாளி மயக்கத்தில் இருந்த போது பாலியல் தொந்தரவு கொடுத்த ஊழியர் கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த இளம் பெண் பெங்களூருவில் வசித்து வருகிறார். அங்கிருந்தபடி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் அவர் பணியாற்றி வந்தார். காலில் பிரச்சனை ஏற்பட்டதை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

இதனை அடுத்து கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக, சென்னை பெருங்குடியில் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள அப்பலோ தனியார் மருத்துவமனையில் கடந்த 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது.

அப்போது அந்த பெண் அரை மயக்கத்தில் இருந்தபோது எக்ஸ்ரே எடுக்க அழைத்துச் சென்றுள்ளனர். எக்ஸ்ரே எடுக்கம் போது அந்த பெண் மயக்கத்தில் இருப்பதாக கருதி அங்கிருந்த ஊழியர் டில்லி பாபு என்பவர் தொடக் கூடாத இடங்களில் தொட்டும் பிறகு தனது உறுப்புகளை அந்த பெண்ணின் மீது வைத்தும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அரை மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணால் நடப்பதை அறிய முடிந்தாலும் தடுக்க முடியவில்லை. இதனை அடுத்து அறுவை சிகிச்சைக்கு முடிந்த பிறகு தனக்கு நேர்ந்ததை மருத்துவர்களிடம் அந்த பெண் கூறி கதறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அந்த பெண் உளறுவதாக கூறியுள்ளன . இதனைஅடுத்து உடனடியாக அந்த பெண் காவல் நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, டில்லிபாபுவை நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே அந்த பெண் மனநிலை சரியில்லாமல் இது போல் தவறான புகார் கொடுத்துள்ளதாக அப்பலோ மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.