அரை நிர்வாணம்! கை, கால் துண்டாக்கப்பட்டு சிதைப்பு! கழுத்தில் சேலை நெறிப்பு! இளம் பெண் மரணத்தில் 1 மாதம் கழித்து வெளியான திடுக் உண்மை!

வேலூர் மாவட்டத்தில் பெண்ணைக் கொன்று அவரது உடலை அரை நிர்வாணத்தில் தண்டவாளம் அருகே வீசிவிட்டு சென்றவர் ஒரு மாதத்திற்கு பின்னர் போலீசில் சிக்கினார்.


ஆம்பூர் அருகே பச்சகுப்பம் ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு ரயில் பாதை அருகே கடந்த 18ம் தேதி இளம் பெண் ஒருவரின் உடல் அரை நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண் யார் என்று போலீஸ் விசாரித்து வந்த நிலையில் அவர் தஞ்சை மாவட்டம் மேல் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த சிவரத்தினம் என்பது தெரியவந்துள்ளது.

போலீஸ் மேற்கொண்ட விசாரணையில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த சிவரத்தினத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவரும் சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்டு முறையற்ற உறவுக்கு வழிவகுத்துள்ளது.

பின்னர் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி இருவரும் பச்சகுப்பம் ரெயில்வே நிலையம் அருகே அருகே நடந்து செல்லும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை சிவரத்தினத்தை அடித்தும் கழுத்தை இறுக்கியும் கொலை செய்து பின்னர் அவரது உடலை தண்டவாளத்தின் அருகே வீசி விட்டு சென்று விட்டார்.

இவை அனைத்தும் ஏழுமலை போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஏழுமலையை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். சக ஊழியர்களால் ஏற்படும் கள்ளக்காதல் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.