3 கணவர்கள்! 4வதாக 3வது கணவனின் தம்பியுடன் முறையற்ற உறவு! திருப்பூர் பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த பயங்கரம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் முறையற்ற உறவுக்கு பழக மறுத்த பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் உடுமலையில் பழனிச்சாமி என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார் சுமதி. சில ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் பழனிச்சாமி உயிரிழக்க மீண்டும் மணிகண்டன் என்பவரை சுமதிக்கு அவரது உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் காலப்போக்கில் அவர் ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வாழ்ந்து வந்ததால் கணவரை பிரிந்து தாய் வீட்டில் தஞ்சமடைந்தார் சுமதி.இதையடுத்து 3வதாக திருமலைச்சாமி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

திருமலைச்சாமியின் உறவினரான கணேஷ் உறவினர் என்ற அடிப்படையில் அடிக்கடி சுமதியை தனியாக சந்தித்து வந்தததாக கூறப்படுகிறது. இவர்களின் உறவை அறிந்த உறவினர்கள் கண்டித்ததை அடுத்து கணேசுடன் பழகுவதை சுமதி நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் வீட்டில் தனியாக இருந்த சுமதியிடம் தன்னிடம் மீண்டும் பழகுமாறு வற்புறுத்தி உள்ளார். மீண்டும் பழக மறுத்த சுமதியை ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கணேஷ் தப்பியுள்ளார்.

இதையடுத்து போலீசார் கணேஷை கைது செய்தனர். கணவனை இழந்த பெண்ணுக்கு ஒரு நல்ல உள்ளம் வாழ்வு கொடுத்தும் அந்த வாழ்க்கையை நல்ல முறையில் வாழாமல் இதுபோல சில பெண்கள் எடுக்கும் முடிவால் மரணம் வரைக்கும் கொண்டு சென்றுவிடுகிறது முறையற்ற உறவு.