பெண்ணின் உள்ளாடைக்குள் பொக்கிஷம்! திறந்து பார்த்து தலை சுற்றிப் போன விமான நிலைய அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் 46 லட்சம் மதிப்பிலான தங்கத்தை தனது உள்ளாடையில் மறைத்து கொண்டு வந்த பெண் விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தாய்லாந்தில் இருந்து பாங்காக் விமானத்தில் சென்னை வந்த பெண் ஒருவரின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சுங்கத்துறை போலீசார் அவரை சோதனைச் சாலைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்துள்ளனர். சோதனையைத் தொடர்ந்து அவர் தனது உள்ளாடையில் 46 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்தி வரப்பட்டது தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் அந்தப் பெண் சென்னை விமான நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 1385 கிராம் எடையிலான 2 தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்ததோடு அவரிடம் அந்த தங்கத்தை பெற வந்த மற்றொருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உள்ளாடைக்குள் இவ்வளவு தங்கமா என்று அதிகாரிகள் தலை சுற்றிப்போயினர்.

இதேபோல் திருச்சி விமான நிலையத்திலும் சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை நடத்தியது.

அப்போது இலங்கையைச் சேர்ந்த சவரிமுத்து அந்தோணி செபாஸ்டின் என்பவர் தனது ஆசனவாயில் 464 கிராம் எடையுள்ள 14 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளார். இதனைக் கண்டறிந்த திருச்சி சுங்கத்துறை காவல்துறையினர் அவரை கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.