ஐதராபாத்: பெண் நோயாளியிடம் பாலியல் ரீதியாக சில்மிஷம் செய்த வார்டு பாய் கைது செய்யப்பட்டார்.
வெண்டிலேட்டரில் உயிருக்கு போராடிய கர்ப்பிணி பெண்! தொடக் கூடாத இடங்களில் தொட்ட வார்ட் பாய்! ஹாஸ்பிடல் பயங்கரம்!
ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள சென்சூரி ஹாஸ்பிடல் எனும் தனியார் மருத்துவமனையில், அச்சுத ராவ் எனும் 50 வயதான நபர் வார்டு பாயாக பணிபுரிகிறார். இவர் ஐசியூ பிரிவில், அனுமதிக்கப்பட்டுள்ள 30 வயதான இளம்பெண்ணை பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட அந்த பெண், உடல்நலக் கோளாறு காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
அவர் ஒரு கர்ப்பிணி என்றும் பாராமல், வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் அப்பெண்ணிடம், குறிப்பிட்ட வார்டு பாய் முறை தவறி நடந்துள்ளார். இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர், பஞ்சரா ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இதையடுத்து, ஐபிசி 354 பிரிவின்கீழ் வழக்குப் பதிந்த போலீசார், அந்த சில்மிஷ வார்டு பாயை கைது செய்தனர். பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.