வருங்கால கணவன் என முந்தி விரித்தேன்..! ஆனால்..! கோவை என்ஜினியர் மீது பெண் என்ஜினியர் பகீர் புகார்!

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதாக சகஊழியர் மீது கத்தார் விமான நிலைய பெண் பொறியாளர் கோவையில் புகார் அளித்துள்ளார்.


மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதிபாண்டேவும், கோவையை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவரும் கத்தார் நாட்டு விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொறியாளர்கள். ஒரே இடத்தில் பணிபுரியும் இருவருக்கும் காதல் மலர இருவரும் மருதமலை, திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றது மட்டும் அல்லாமல் தனியாக அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனார்.  

இந்நிலையில் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர அவர்களும் எதிர்ப்பு ஏதும் சொல்லாமல் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

ஆனால் கடந்த ஜனவரி முதல் காதலியுடன் பேசுவதை லட்சுமி நாராயணன் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஒருவேளை தான் ஏமாற்றப் பட்டோமோ என கருதிய நிதிபாண்டே இதுகுறித்து விசாரிக்கையில் லட்சுமி நாராயணன் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதை தெரிந்து கொண்டார்.

இதனால் வேதனை அடைந்த நிதிபாண்டே தன்னை காதலித்து ஏமாற்றியது மட்டும் அல்லாமல் உல்லாசமாக இருந்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ள காதலன் லட்சுமி நாராயணனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வடவள்ளி காவல்நிலையம், பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையம், மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அங்கு நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கருதிய நிதிபாண்டே உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.