உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்ட பெண்ணுக்கு ரயில்வே போலீசார், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உதவிகள் செய்ததை அடுத்து அழகான குழந்தையை பெற்றெடுத்தார் சீமா என்பவர்.
மின்னல் வேகத்தில் சென்ற ரயில்! வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணி! ஓடோடி வந்த போலீசார்! பிறகு நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிரிஸ்டருக்கு துர்கானியாக எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. அந்த ரயில் உத்தரகாண்ட் மாநிலத்தில் சென்று கொண்டு இருந்த போது ஒரு கர்ப்பிணி பிரசவ வலியால் துடித்தார். அந்தப் பெண் பிரசவ வலியால் துடித்த உடன் ரயில்வே போலீசாருக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனர். அப்போது ரயில் ரூர்கி எனும் ரயில் நிலையத்தை நோக்கி துர்கானியா எக்ஸ்பிரஸ் சென்று கொண்டு இருந்தது.
ரூர்கி நிலையத்தில் துர்கியானா எக்ஸ்பிரஸ் நிற்க அனுமதி இல்லை என்ற போதும் சிறப்பு அனுமதி பெற்று அந்த பெண்ணுக்காக ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் கர்ப்பிணியை மருத்துவமனை அழைத்து செல்ல முடிவு எடுத்தபோது அவர் ரயிலிலேயே அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.
இதனால் ரயில் பயணிகள், போலீசார் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் தாய், சேய் இருவரும் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து போலீசார் தெரிவித்தபோது ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண் பீகார் மாநிலத்தை சேர்ந்த சீமா என்பதும் சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் சென்று கொண்டு இருந்த போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் சீமா குழந்தை பெற்றெடுக்க உதவிய பயணிகளுக்கும் போலீசார் நன்றி தெரிவித்தனர். பின்னர ரயில் அங்கிருந்து சற்று தாமதமாக புறப்பட்டு சென்றது. பொதுவாக பொது வெளியில் அதாவது பேருந்து, ரயில், விமானம், பேருந்து நிலையம் ஏன் ஒருமுறை கழிவறையில் கூட பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தைகள் அனைத்துமே ஆரோக்கியமாகத்தான் பிறக்கிறது. பிரசவம் ஆன அரை மணி நேரத்தில் பெண்களும் சாதாரணமாக வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.
ஆனால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் பெண்களுக்கு பனிக்குடம் உடைந்து விட்டது அது, இது என ஏதோ ஒரு காரணம் சொல்லி சிசேரியன் செய்யப்படுகிறது. அதற்கான பில்லும் தீட்டப்படுகிறது ஏன் என தெரியவில்லை. உலகில் மனிதர்களை தவிர வேறு எந்த உயிரினமும் சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்பது கூடுதல் தகவல்.