சென்னையின் பிரபல ஏஆர்சி கருத்தரிப்பு மைய மருத்துவமனைக்குள் சென்று போலீசார் சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிகிச்சைக்கு வந்த பெண் மர்ம மரணம்! ARC கருத்தரிப்பு மையத்தற்குள் நுழைந்த போலீஸ்! சென்னை பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்மணி ஒருவருக்குதிருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை பேரு இல்லை. இதனை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையம் குறித்து விளம்பரம் மூலம் அந்த பெண்மணி அறிந்துள்ளார்.
இதனை அடுத்து கடந்த ஆண்டு அந்த பெண்மணி சென்னை எழும்பூரில் உள்ள ஏஆர்சி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு செயற்கை முறையில் குழந்தையை உருவாக்குவதற்கான சிகிச்சைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிகிச்சையின் ஒரு அங்கமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அந்த பெண்மணி ஏஆர்சி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வந்துள்ளது. திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தனது மனைவி உயிரிழந்ததற்கான காரணத்தை தெரிவிக்க மறுப்பதாக கூறி காவல் நிலையத்தில் அவரது அண்ணன் புகார் அளித்தார். பின்னர் வழக்குப் பதிவு செய்த எழும்பூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால் ஏஆர்சி மருத்துவமனை விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் சிகிச்சையின் போது உயிரிழந்த பெண்மணியின் ஆவணங்களை ஏஆர்சி மருத்தவமனை நிர்வாகம் தர மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எழும்பூர் போலீசார் எழும்பூரில் உள்ள ஏஆர்சி மருத்துவமனைக்குள் சென்று சோதனை மேற்கொண்டனர். உயிரிந்த பெண்மணி தொடர்பான ஆவணங்களை கைப்பற்ற இந்த அதிரடி சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.
பிரபலமான மருத்துவமனைக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.