மகள்களை கணவனுடன் தீபாவளி கொண்டாட அனுப்பிவிட்டு பெண் பஸ் கண்டக்டர் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி சம்பவம்!

ஐதராபாத்: வேலையில்லாத விரக்தியில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் பஸ் கண்டக்டர் தற்கொலை செய்துகொண்டார்.


தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 48000 ஊழியர்களை சமீபத்தில் அம்மாநில அரசு ஒரே நேரத்தில், அதிரடியாக பணிநீக்கம் செய்தது. இதில், பாதிக்கப்பட்டவர்களில், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த கே.நீரஜா என்ற பெண் கண்டக்டரும் ஒருவர். இவர், வேலையிழந்த விரக்தியில் கடந்த சில நாட்களாக, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில், தீபாவளி கொண்டாடுவதற்காக, தனது 2 குழந்தைகளை தாய் வீட்டிற்கு நீரஜா அழைத்துச் சென்றார். அதேசமயம், நீரஜாவின் கணவர் அவருடைய தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், தனியாக வீட்டில் இருந்த நீரஜா, திடீரென தற்கொலை செய்துகொண்டார்.  

இதன்பேரில், அவருடைய கணவர் அளித்த புகாரை ஏற்று, போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தெலுங்கானா முழுவதும் போக்குவரத்து ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.