ஏற்கனவே 2 கணவர்கள்..! 3வதாக இளைஞரை கரம் பிடித்த இளம் பெண்! பிறகு நேர்ந்த பரிதாபம்!

குஜராத்தில் 3வது முறை திருமணம் செய்த பெண்ணை உறவினர்கள் ஆத்திரத்தில் அடித்து துவம்சம் செய்தனர்.


குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பெஹ்ரம்பூரா கிராமத்தில் வசித்து வருபவர் நிதி சோலங்கி. இவருக்கு சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து வைத்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். பின்னர் கடந்த பிப்ரவரிமாதம் ஆஸ்யுதோஸ் வியாஸ் என்பவரை இரண்டாவதாக மணமுடித்தார். 

இந்நிலையில் அவருடனும் வாழ பிடிக்காத சோலங்கிக்கு அமன் டங்கர் என்பவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருடன் ஊரை விட்டே ஓடினார் சோலங்கி. இதனால் மாப்பிள்ளை வீட்டாரும், சோலங்கி வீட்டாரும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து சோலங்கி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர்.

2வது கணவரை  விவகாரத்து செய்தால்தான் 3வது நபருடன் வாழ முடியும் என்றும் எனவே நீதிமன்றம் வருமாறும் கூறியுள்ளனர். இதை நம்பி குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்ற சோலங்கியை சுற்றி வளைத்த உறவினர்கள் அவரை அடித்து உதைத்து கடுமையாக தாக்கி உள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த சோலங்கி தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒட்டு மொத்த உறவினர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தன்னுடைய முடியை பிடித்து இழுத்தும், வயிற்றில் பலமாக குத்தியும் அடித்ததாக குறிப்பிட்ட சோலங்கி பழைய கணவர்கள் தூண்டுதலில்தான் உறவினர்கள் தாக்கியதாக குற்றம்சாட்டினார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.