குழந்தை பெற தயாராகும் பெண்கள் அவசியம் படிக்கவேண்டியவை!

ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தாய் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். மனதையும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும். தாய் கருத்தரிப்பதற்கு முன்பாகவே ஆரோக்கியத்துடன் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகப் பிறக்கும்.


ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட பழகுங்கள். தினமும் தன் அன்றாட உணவில் ஃபோலிக் ஆசிட் உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையும் படிக்க: காபி, டீக்கு பதிலாகக் குடிக்க வேண்டிய 9 மூலிகை டீ, காபி மற்றும் பால்.

மாதவிலக்கு தொடங்கிய நாள் 1-ம் தேதி என வைத்துக் கொள்ளுங்கள். 12-ம் தேதிக்கு மேல் நீங்கள் தாம்பத்திய உறவு மேற்கொண்டால் குழந்தை கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம். உதாரணத்துக்கு, மே 1-ம் தேதி உங்களுக்கு மாதவிலக்கு தொடங்கிய முதல் நாள் எனில், நீங்கள் மே 12-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தாம்பத்திய வாழ்வில் ஈடுபட்டால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

பச்சை மற்றும் அடர்பச்சை நிற காய்கறிகளைச் சாப்பிடுங்கள். முட்டைக்கோஸ் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரோக்கோலியும் நல்ல உணவு. உருளைக்கிழங்கை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. மீன், முட்டையில் உள்ள சத்துகள் கருத்தரிக்க உதவும். மாதுளை பழம் அல்லது மாதுளை பழச்சாறைத் தொடர்ந்து அருந்துகள்.  வாழைப்பழத்தை தினமும் 1 அல்லது 2 என்ற அளவில் சாப்பிடுங்கள். அதுவும் செவ்வாழைப் பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.  பூசணி விதைகளைச் சாப்பிடுவது நல்லது. ஆளிவிதையை மோரில் அடித்துக் குடிக்கலாம். பூண்டு, இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நட்ஸில் உள்ள ஊட்டச்சத்துகள், கருத்தரிக்க உதவும்.